IT Technology CEOs in top 5 places of world billionaire list
Technology

IT Technology CEOs in top 5 places of world billionaire list

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப (ஐடி/ information technology) நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செய்து வருகின்றனர். கடந்த 5 வருடங்களில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 5 இடத்தில் மட்டுமே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

ஜெப் பீசோஸ் / Jeff Bezos ‍(அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி)

கடந்த வருடம் 4வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பீசோஸ், 3வது இடத்திற்கு முன்னேறி சில மாதங்களிலேயே வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் உடன் நீண்ட காலம் போட்டியாய் இருந்தார். தற்போது நிலையான முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் 3 இடம்

ஜெப் பீசோஸ், அமேசான்.காம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் - 142 பில்லியன் டாலர்

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் - 94.2 பில்லியன் டாலர்

மார்க் ஜூக்கர்பெர்க், பேஸ்புக் இன்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் - 81.6 பில்லியன் டாலர்

இவர்கள் மூவரும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடத்தில் உள்ளனர்.

மார்க் ஜூக்கர்பெர்க்/ Mark Zuckerberg (பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி)

பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிலையான வர்த்தக உயர்வின் மூலம் பேஸ்புக் பங்குகளின் மதிப்பு அதிகளவில் உயர்ந்து வாரன் பபெட்டை 4வது இடத்திற்குத் தள்ளி 3வது இடத்தைத் தட்டிச் சென்றார். இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடத்தையுமே டெக் துறையைச் (IT Sector) சார்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.