Huawei’s Mate X foldable phone
கைபேசி

Huawei’s Mate X foldable phone with 8GB of RAM and 512GB of storage, and releasing it from the middle of this year.

சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகாத நிலையில் அதற்குப் போட்டியாய் மெல்லிய மற்றும் பெரிய திரையுடன் வடிவமைக்கப்பட்ட ஹூவாய் மேட் அக்ஸ் / Huawei Mate X மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மொபைல் வேல்டு காங்கிரஸ் (Mobile World Congress) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் மேட் எக்ஸ் / Huawei Mate X, 8 இஞ்ச் அளவு கொண்ட OLED டிஸ்பிளேவுடனும், வெறும் 11mm மடிந்த தடிமனும், ஒரு 4,500mAh பேட்டரி, மற்றும் ஹவாய் இன் கிர்ன் 980 பிராஸசர் ( Huawei’s in-house Kirin 980 processor) கொண்டுள்ளது.

Huawei-Mate-X-foldable-phone-4-dimension

செயல்பாட்டு அடிப்படையில், ஹூவாய் மேட் எக்ஸ் பெறும் அனைத்து டிஸ்பிளேயும் பின்வருமாறு
  • 6.6 அங்குல (19.5: 9 விகிதம், 2480 x 1148 ரெஸலூஷன்) முதன்மை டிஸ்பிளே, மடிந்த போது.
  • 6.4-அங்குல (25: 9, 2480 x 892) பின்புற ரெஸலூஷன், மூடப்பட்டிருக்கும் போது.
  • 8-அங்குல (8: 7.1, 2480 x 2200) பிரதான ரெஸலூஷன், நிமிர்த்து வைக்கும்போது.

முதன்மை நினைவகமாக 8GB RAM மற்றும் 512GB சேமிப்பு நினைவகம், 40 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய கேமரா, 5G மொபைல் தொழில்நுட்பம், WiFi, Bluetooth 5.0 என அற்புத்மான சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

மேட் எக்ஸ் ஒற்றை OLED டிஸ்பிளே உண்மையில் மூன்று வகையாக உதவுகிறது.

ஹூவாய் மேட் எக்ஸ் / Huawei Mate X மூடப்பட்டிருக்கும் போது (மடிந்த நிலையில்), ஒரு இரட்டை திரைகொண்ட ஸ்மார்ட்போன் ஆக உள்ளது. பின்புற இரண்டாவது டிஸ்பிளே முக்கிய கேமராவுடன் செல்ஃபி எடுக்க அனுமதிக்கும் அல்லது மறுபக்கத்தில் இருக்கும் நபருக்கு உங்கள் முன்பக்க டிஸ்பிளேவில் உல்ல காட்சியை பகிர்ந்து கொள்ளலாம். ஹூவாய் மேட் எக்ஸ்சை திறந்து பார்த்தால், குறைந்த bezels கொண்ட சதுர (கிட்டத்தட்ட) வடிவிலான டேப்லெட் ஆக உதவக்கூடும்.

8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜி.பை. சேமிப்புடன், 2,299 யூரோ விலையில், ஹூவாய், இந்த ஆண்டு மத்தியில் மேட் எக்ஸ் ஸ்மார்ட் ஃபோனை (Huawei’s Mate X foldable smartphone) விற்பனை செய்ய உள்ளது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.