Swiggy Delivery Boy
Gadgets

Swiggy to deliver home essential items in the name Swiggy Stores

உணவு வினியோகம் செய்து வரும் நிறுவனமான ஸ்விகி (Swiggy) தனது புதிய விரிவாக்கத் திட்டத்தைப் வெளியிட்டுள்ளது. ‘ஸ்விகி ஸ்டோர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின்படி வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய முடிவெடுத்துள்ளது ஸ்விகி.

துளிகள்

  • பழங்கள், காய்கறிகள் மற்றும் குழந்தை நல பொருட்களை டெஃலிவரி செய்ய திட்டம்
  • ‘ஸ்விகி ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் இயங்கும்.
  • 80-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் ஸ்விகி செயல்படுகிறது

மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அடிப்படைத் பொருட்களை மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் அனைத்து உடல்நலம் (Baby & Healthcare Products) சார்ந்த பொருட்களையும் டெலிவரி செய்யவும் உள்ளது. தற்போதுள்ள அதன் மொபைல் செயலியின் (Swiggy App) மூலம் ஆர்டர் செய்து பயன்படுத்த முடியும் என்று ஸ்விகி தெரிவித்துள்ளது.

ஸ்விகியின், இந்தப் புதிய முயற்சியியால் 'பிக் பாஸ்கேட்' நிறுவனத்திற்குப் போட்டியாக ஸ்விகி இருக்கும் என கருதப்படுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.