Madras High Court Request to Ban Tiktok Video App
Gadgets

Madras High Court Request to Ban Tiktok Video App

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 200 மில்லியனிற்கும் அதிகமான தடவை டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன. சீன செயலியான இந்த டிக்டாக் செயலியை ((TikTok Mobile App) 104 மில்லியன் இந்தியர்கள் உபயோகித்து வருகின்றனர்.

டிக்டாக் செயலியில் ஆரம்பத்தில் வடிவேலு, கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை துணுக்குளை வீடியோவாக பதிவிட்டு வந்தனர். ஆனால் இப்போது சொந்தமாக வீடியோக்களை எடுத்து பதிவேற்றம் செய்வதால் ஒரு சாரருக்கு வெறுப்பும் ஏற்படுகிறது. இது திறமையை வெளிப்படுத்தும் முக்கிய கருவியாக இந்த டிக்டாக் செயலி பயன்படுத்தப்பட்டாலும். நாளாக நாளாக இதில் வெளியாகும் வீடியோக்கள் அறுவறுக்கத் தக்கதாகவும் , ஆபாசம் உடையதாகவும் மாறியது. முகம் சுழிக்கும் வகையில் வீடியோக்கள் வெளியாகத் தொடங்கின.

டிக்-டாக் செயலிக்கு தடை (Ban Tiktok)

டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்க கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்

விசாரணையில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும்படி மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

>டிக்டாக் வீடியோக்களை ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

டிக்டாக் செயலி மற்றும் ப்ராங்க் வீடியோக்களுக்கு தடை

இந்த டிக்டாக் செயலியால் பல சமூக சீர்கேடுகள் உருவாகி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த அப்பிளிக்கேஷனை இந்தியாவில் தரவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த தடையை அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தோனேசியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும் இந்த செயலிக்கான வரைமுறையை நிர்ணயிக்க வேண்டும் எனவும், இதுதவிர TikTok வீடியோக்களை ஒளிபரப்புவதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.