Youtube-Channel-Strikes-system
Gadgets

YouTube updates Community Guidelines with channel strike system with one-time warning and more consistent punishments

நீங்கள் உருவாக்கிய வீடியோக்களை பகிர்ந்து கொள்ள YouTube ஒரு மிகப் பெரிய தளமாகும், மில்லியன் கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பல வகையான செய்திகள் மற்றும் பொழுதுபோக்கிற்கான விடியோக்களை பதிவேற்றம் செய்கிறார்கள் / பகிர்ந்து கொள்கிறார்கள். துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சமூக வழிகாட்டுதல்களை மீறுகின்ற வீடியோக்களை குறைப்பதற்கென ஒரு தடைநிறுத்த (strikes system) அமைப்பினை YouTube கொண்டுள்ளது.

இதன்படி யூடியூப் விதிமுறைகளை மீறி வீடியோக்களை அப்லோட் செய்தால் கணக்குகள் நீக்கப்பட்டுவிடும். YouTube தடைநிறுத்த (strikes system) அமைப்பை, அதன் படைப்பாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சேனலை (YouTube Channel) நிறுத்தம் செய்யாமல், பிரச்சினைக்குரிய வீடியோவை மட்டும் நீக்குவதாக விதிமுறையை மேம்படுத்தி உள்ளது.

  • The first strike will result in a one-week freeze on the ability to upload any new content to YouTube, including live streaming, and other channel activities. Strikes will expire after 90 days.
  • The second strike in any 90-day period will result in a two-week freeze on the ability to upload any new content to YouTube.
  • The third strike in any 90-day period will result in channel termination.

சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளை (Youtube Community Guidelines) மீறும் படைப்பாளர்கள் ஒரு எச்சரிக்கையை மட்டுமே பெறுவார்கள் என யூடியூப் நிறுவனம் எச்சரித்துள்ளது - அடுத்தடுத்த கொள்கை மீறல்கள் வீடியோ சேனல் நிறுத்தங்களை விளைவிக்கும்.

விதிமுறைக்கு அப்பாற்பட்டு வீடியோ அப்லோடு செய்தால், ஒரு தடையானது - "நீங்கள் ஒரு வாரம் லைவ்ஸ்ட்ரீம் திறன், புதிய வீடியோக்களை பதிவேற்றம், மற்றும் "பிற சேனல் செயல்பாடுகள் அனைத்தையும் செய்ய முடியாமல் முடக்கப் படுவீர்கள்". அடுத்த 90 நாட்களுக்குள் விதிமீறல் செய்தால் இரண்டாவது தடை - இரண்டு வாரங்களுக்கு முடக்கப் படுவீர்கள். 90 நாட்களுக்குள் விதிமீறல் செய்தால் மூன்றாவது தடையானது உங்கள் சேனலை நீக்கம் செய்துவிடும்

யூடியூப் தளத்தில் வீடியோக்களை அப்லோட் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதுடன் பெரும்பாலானவர்கள் விதிமுறைகளை மீறுவதன் காரணமாகவே இப் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகின்றது.

புதிய விதிமுறையானது பிப்ரவரி 25 ஆம் தியதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.