Super Bike from Ducati
Automobiles

Bike riders should know this

இன்றைய நாட்களில் புது இரக பைக்குகள் அறிமுகம் செய்யப்படும் வேளையில் அனைவரும் உற்று பார்க்கும் விஷயம் - அதன் சிசி எவ்வளவு என்பதுதான். குறிப்பாக இளவட்டங்கள். மின்னல் வேக பைக்குகள் அதிக சிசி உடன் ( மோட்டார் சைக்கிள்கள்) அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சூப்பர் பைக்குகளின் பட்டியல் பார்க்க‌ கிளிக் செய்யுங்கள்

சில வருடங்களுக்கு முன்னர் சிசி அதிகமான பைக்குகள் உபயோகத்திற்கு இந்தியாவில் அனுமதி இல்லை. கவாஸகி நிஞ்ஜா (Kawasaki Ninja), ட்ரையம்ஃப் டெய்டோன (Triumph Daytona), BMW kt1600 மற்றும் ஏப்ரிலியா RSV4 (Aprilia RSV4) போன்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை ஓட்டுதற்கு இந்திய சாலைகள் தயார் செய்யப்படவில்லை என்றாலும், இந்த சூப்பர் பைக்கின் மீது இளைஞர்களின் மோகம் காரணமாக, ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் நிறுவனமும் ஒரு சூப்பர் பைக் ஒன்றை தயார் செய்கின்றன.

.

4-ஸ்ட்ரோக் எஞ்சின், டூயூப்லெஸ் டையர், சூப்பர் கவர்ச்சியான ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் அதி வேக சக்தி கொண்ட 1000 சிசி எஞ்சின் ....., இந்த பைக்குகள்தான் இன்றைய இளைஞர்களின் முதல் தேர்வு ஆகும்.

வேகம் கூடக்கூட அதன் தேய்மானமும் ஜாஸ்தி, பராமரிப்பும் (மெயின்டெயினன்ஸ்) தான். சிசி குறைந்த மோட்டார் சைக்கிள்களின் எஞ்சின் கார்பரேட்டர்களாலும் (carburetor), சிசி கூடிய மோட்டார் சைக்கிள்களின் எஞ்சின் இன்ஜெக்டர் பம்ப்களாலும் (injector pumps) இயங்குகின்றன.

கார்பரேட்டர்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் பிரச்சினைகள் குறைவாக காணப்படுகின்றன . இன்ஜெக்டர் பம்ப் உடையவற்றில் சற்று அதிகமாகவே பிரச்சினைகள் இருக்கும். இன்ஜெக்டர் பம்ப் எவ்வாறான பிரச்சினைகளை தரக்கூடும் என்பது தொடர்பான விபரங்களை கீழ்காணும் வீடியோவில் காணலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.